சட்டத்திற்கு புறம்பாக சாயப்பட்டறைகள்


  கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கின. இதிலிருந்து வெளியான கழிவு நீரால் விவசாயமும் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 2007-ம் ஆண்டு சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனாலும், சட்டத்திற்கு புறம்பாக இன்றுவரை பல சாயப்பட்டறைகள் இயங்குவதாக புகார் எழுந்துள்ளது.
தண்ணீர் உண்டு.. பயன் இல்லை...
  சாயப்பட்டறை கழிவு நீர் ஆற்றில் கலந்ததால், விவசாயத்திற்கான நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டதோடு, விவசாய நிலங்களும் விளைச்சலுக்கு ஏற்ற தரத்தை இழந்து விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தகுதியற்றதாகச் சான்று
  சாயப்பட்டறைகளால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மண்ணை சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அதிகாரிகள், ஆய்வு செய்ததில் விளை நிலங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறியிருப்பது தெரிய வந்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
  இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை தொடர்பு கொண்ட போது, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.