எழில்சோலை - மரம் மாசிலா மணி.--9597956895
பசுமை நாயகன்
பசுமை நாயகன்                 


   த்திரமேரூர்:சாலவாக்கம் அருகே உள்ள கைத்தண்டலம் கிராமத்தில், 370 வகையான மூலிகை மரங்களை பயிரிட்டுள்ளார் ஒரு விவசாயி.    உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்துள்ளது ஒழையூர் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட கைத்தண்டலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாசிலா மணி. 5 ஏக்கர் நிலத்தை பக்குவப்படுத்தி, எழில்சோலை என்ற பெயரில், கடந்த 2009ம் ஆண்டில், பல வகை மூலிகை செடிகளை பயிரிட துவங்கினார்.மூலிகை மரங்கள் வளர்ப்பு-
 மரம் மாசிலா மணி - 9597956895

          தற்போது மூலிகை மரங்கள், நட்சத்திர மரங்கள், கல்விக்கூடங்களில் வளர்க்கப்படும் நிழல் தரும் மரங்கள் மற்றும் செர்ரி உள்ளிட்ட பல்வேறு வித பழவகை மரங்களும், வாசனை பொருட்களுக்கு பயன்படுத்தப் படும் மர வகைகளையும் வளர்த்து வருகிறார்.பாரிஜாதம், பவளமல்லி, மனோரஞ்சுதம், செண்பக பூ போன்ற மலர் செடி வகைகளும், வெற்றிலை, பாக்கு, காப்பி உள்ளிட்ட செடி வகைகளும், இத்தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் இத்தோட்டத்தில் நிறைந்துள்ளதால், இப்பகுதியை சுற்றி பல ஏக்கரில் விவசாய நிலங்களில், பூச்சித்தாக்குதல் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இத்தோட்டத்தில் உள்ள அரிய வகை மரங்களை ஆவலோடு வந்து பார்த்து செல்கின்றனர்.        மாசிலாமணி --- சாதாரண விவசாயியாக இருந்த நான், 2007ம் ஆண்டு மரம் வளர்ப்போர் சங்கத்தின் மாவட்ட தலைவராக, வனத்துறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டேன். அப்போது, விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் மரக்கன்றுகள் நட ஊக்குவித்து வந்தோம். இதனால் முன்மாதிரி விவசாயியாக இருக்க தீர்மானித்து கலப்பிணை பண்ணை உருவாக்கி, அதில் அரிய வகை மரங்களை வளர்த்து வருகிறேன்.இத்தோட்டத்தில், சந்தனம், செஞ்சந்தனம், வேங்கை, வில்வம், மகாவில்வம், வன்னி, பதிமுகம், நாகலிங்கம், ரோசொட்டு, சிசுமரம், மகிழம்மரம் உள்ளிட்டவைகளும், ஆப்பிள், உத்திராட்ச மரம், போதிமரம், திருவோடு உள்ளிட்ட அரிய வகை மரங்களும் உள்ளன.இதே போன்று, கருந்துளசி, காட்டாமணக்கு, கடல் அத்தி, கருநொச்சி, வாகநாரம், கருந்தொண்ணை, கல்யாணமுருங்கை, வெள்ளருக்கு, திருவாட்சி, கோதகத்தி, புன்னை, இளமஞ்சு போன்ற பல்வேறு மருத்துவ குணம் கொண்ட செடிவகைகளையும் மரங்களையும் வளர்த்து வருகிறேன். 


பல வகையான பறவைகள்        மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, திருமண விழாக்களில் அன்பளிப்பாகவும், பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு இலவசமாகவும் கொடுக்கிறேன். செர்ரி, புதுவைபலா உள்ளிட்ட மரங்கள் உள்ளதால் பல வகையான பறவைகள் தோட்டத்திற்க்குள் வந்து கூடு கட்டி வாழ்கின்றன. தற்போது, இங்கு 370 வகையான மர வகைகள் உள்ளன. இன்னும், 3 ஆண்டுகளுக்குள், 1000 வகையான மரங்களை இத்தோட்டத்தில் உற்பத்தி செய்ய உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
                                                                     -பசுமை நாயகன்

வெந்தயக்கீரையின் பயன்கள் :-

        வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

             வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

                 வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். 

             வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிர் சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.

மா மரம்பசுமை நாயகன் Pasumai Nayagan


     ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும்.

மா மரத்தில் ஊடுபயிராக 5 ஆண்டு வரையிலும் மரவள்ளி, நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம்.


தென்னை மரத்தின் அடியில் இப்படி தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து வளர்ந்த பின்னால் பிடுங்கி மரத்துக்கு உரமாகப் போடலாம் என்ற எண்ணத்தில் இப்படிச் செய்துள்ளோம்.....

அருகில் பசுமையாக இருப்பதும் சணப்பு, கம்பு, மக்காச் சோளம் மூன்றும் கலந்து பசுந்தாள் உரத்துக்காக விதைத்து முளைத்திருப்பது ஆகும்!

நாவல் பழத்தின் மருத்துவ குணம்www.thagavalthalam.com பசுமை நாயகன்


         நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வர்
தலைமையில் திருவாரூரில் விவசாயிகள்
மரபணு மாற்ற விதைகளுக்கு எதிர்ப்பு

பசுமை நாயகன் Pasumai Nayagan
    இந்தியாவில், பயிர் மற்றும் விதைகளில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை நிரந்தரமாக புறக்கணிக்க வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
        திருவாரூர் ரயில்நிலையம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வர் தலைமை வகித்தார். இதில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை புகுத்தி வரும் மான்சான்டோ நிறுவனத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    மரபணு மாற்றப்பட்ட விதைகளை சட்டபூர்வமாக்கும் உயிரி தொழில்நுட்ப ஒழுங்காற்றுச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இயற்கையின் அருட்கொடை


                    யற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள்.  இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.  மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள்.   மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடிகளும் உள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் பல வகைகள் உள்ளன.  இந்த மரங்களில் புங்க மரத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம்.

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான்.  எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை.  அதிக நிழலை தரக்கூடியது.  பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும்.  இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும்.  சாலை ஓரங்களில் நிழல்  தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று.  வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி  சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.

புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கும் திட்டத்தைப் பற்றி மஹாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து வருகிறது.  இந்த விதைகளிலிருந்து 30 - 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

மருத்துவப் பயன்கள்

இலைகளின் சாறு - இருமல், சளி, பேதி, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.

விதைகள் - தோல் வியாதிகளை அகற்றும்.

வேர்கள் - பற்கள் மற்றும் ஈறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.

மரப்பட்டை - மூல வியாதிக்கு சிறந்த மருந்து.

பூக்கள் -  உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

விதையின் பொடி - காய்ச்சல், இருமல், நெஞ்சுச் சளியைப் போக்கும்.

வித்துகளில் உள்ள எண்ணெய் வாத வியாதிகளுக்கும், மூட்டு வலிக்கும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புங்க மரத்தின் இலை, பூ, வேர், விதை, எண்ணெய் அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டது.  இதற்கு புன்கு, பூந்தி, கரஞ்சகம், கரஞ்சம் என்ற வேறு பெயர்களும் உண்டு.

புங்கின்விதை காற்கிரந்த புண்கரப்பான் காதெழுச்சி

அங்கசன்ன கண்ணோய்க்கும் ஆம்பேதி-யுங்கட்கும்

காட்டுப்புங் கின்விதைக்கு கண்டதே மற்சொறிமேய்ப்

பூட்டுப்பங் கின்வாய்வும் போம்

            (அகத்தியர் குணபாடம்)

புங்கன் இலை, புளியிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பிலை, பொடுதலை, உத்தாமணி, கறிவேப்பிலை, நாரத்தை இலை, சங்கச்செடி இலை, அவுரி இலை, பொன்னாவாரை இலை இவைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு கொதிக்க வைத்து அதில் கடுகுரோகிணி, இந்துப்பு இவற்றை துணியில் சிறு பொட்டலங்களாகக் கட்டி கொதிக்க வைத்த நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கியவுடன் வடிகட்டி மாந்த நோய்களுக்கு கொடுத்து வந்தால் மாந்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.

புங்கம் பூ எடுத்து நெய்விட்டு வதக்கி தூளாக செய்து  தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் வராது.  மேலும் மேக நோயின் பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்.  இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வருவது நல்லது.  இக்காலங்களில் புளி, புகை வாயுவை அதிகரிக்கும் உணவுகள் முதலியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

புங்கம் பூ, புளியம்பூ, வசம்பு, சின்ன வெங்காயம், சீரகம், வெட்பாலை அரிசி, நன்னாரி என வகைக்கு 35 கிராம் எடுத்து 3/4 லிட்டர் பாலில் கொதிக்க வைத்து 1 லிட்டர் புங்க எண்ணெய் விட்டு காய்ச்சி கரப்பான், நாள்பட்ட ஆறாத புண்கள் மீது தடவினால் அவை எளிதில் குணமாகும்.

தீக்காயம், நாள்பட்ட ஆறாத புண்கள், வடுக்கள், தழும்புகள், கரப்பான் நோய்கள், சொரி, சிரங்கு இவற்றிற்கு புங்க எண்ணெயை லேசாக சூடாக்கி அவற்றின் மீது பூசி வர மேற்கண்ட நோய்கள் அனைத்தும் தீரும்.

புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, ஒரு மெல்லிய துணியில் நனைத்து, பிளவை, ஆறாத புண்கள், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவிவந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்புடன்  பளபளக்கச் செய்யும்.  தினமும் உடலில் புங்க எண்ணெய் தடவி வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.

புங்க எண்ணெய் , வேப்ப எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், புன்னை எண்ணெய் இவைகளை வகைக்கு 700 மி.லி. எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம், வசம்பு, பெரிய வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், கிராம்பு, சதகுப்பை, கடுகுரோகிணி, சித்திரமூலம் வகைக்கு 17.0 கிராம் எடுத்து இவைகளை காடி நீர்விட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெய்களுடன் கலந்து, மேலும் சிறிது காடி நீர் சேர்த்து அடுப்பேற்றி எரித்து மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக்கொண்டு சருமத்தில் தடவி வந்தால் மேக நோய், சூலைநோய், இசிவி  சூதக வலி போன்ற நோய்கள் தீரும்.

புங்க இலையை வதக்கி வீக்கங்களுக்கு கட்டலாம்.

புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது.  உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும்.

புங்க மரத்தின் பயன்கள் ஏராளம்.  அதன் பயனை முழுமையாக அடைய நிறைய மரங்களை நாமும் நட்டு வளர்த்து பயன் பெறுவோம்.