சட்டத்திற்கு புறம்பாக சாயப்பட்டறைகள்


  கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கின. இதிலிருந்து வெளியான கழிவு நீரால் விவசாயமும் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 2007-ம் ஆண்டு சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனாலும், சட்டத்திற்கு புறம்பாக இன்றுவரை பல சாயப்பட்டறைகள் இயங்குவதாக புகார் எழுந்துள்ளது.
தண்ணீர் உண்டு.. பயன் இல்லை...
  சாயப்பட்டறை கழிவு நீர் ஆற்றில் கலந்ததால், விவசாயத்திற்கான நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டதோடு, விவசாய நிலங்களும் விளைச்சலுக்கு ஏற்ற தரத்தை இழந்து விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தகுதியற்றதாகச் சான்று
  சாயப்பட்டறைகளால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மண்ணை சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அதிகாரிகள், ஆய்வு செய்ததில் விளை நிலங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறியிருப்பது தெரிய வந்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
  இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை தொடர்பு கொண்ட போது, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கரூரில் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்



கரூர் அரசு கலைக்கல்லூரி தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராத விடுதி காப்பாளரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நல அலுவலகர் ராமசாமி சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவிகள் அவரது அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். அடிப்படை வசதிகள் கோரி பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவிகள் குற்றம்சாட்டினர்.
                                                                                       -சந்திரசேகர்

நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

   கரூர் அருகே மணவாடி பகுதியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கூலித் தொழிலாளி ஜெயராமன் என்பவரது மகனான சுதாகரன், நேற்று தனது நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.
நீச்சல் தெரியாத நிலையில், குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றதால், சுதாகரன் நீரில் மூழ்கி உள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர். சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீண்டும் தலைதூக்கியுள்ள மின்வெட்டு பிரச்சனை

   மிழக மக்களை நீண்ட நாட்களாகவே சிரமத்திற்கு உள்ளாக்கி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னை மீண்டும் பெரிய அளவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.
தவிக்க வைக்கும் மின்வெட்டு : மின்வெட்டுப் பிரச்னையில் இருந்து தமிழக மக்கள் இன்னும் மீளவில்லை. கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், தினமும் 10 மணிநேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைபடுவதால் மக்களின் அவஸ்தை அதிகரித்துள்ளது. தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவ மாணவிகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துப் பரீட்சை எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் பெரும் தலை வலியை ஏற்படுத்துகிறது மின்வெட்டு.
தொழில்துறையினருக்கும் பாதிப்பு : மின்வெட்டால் தொழில்துறையினருக்கும் அதிக பாதிப்பு நேரிடுகிறது. இதனால் சிறு தொழில் நடத்துவோர் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
நம்பிக்கை பொய்த்துப்போகக் கூடாது : தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகள்  கூறுகையில் : காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு குறைந்தது தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். இந்த மின்வெட்டுப் பிரச்னை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விடக்கூடாது என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-சந்திரசேகர்

மத்திய அரசின் தேசிய நீர் கொள்கை !

தேசிய நீர் கொள்கை வரைவு 2012 (Draft National Water Policy 2012) என்ற வரைவு இந்திய அரசின் நீர்வள அமைச்சகம் 31/01/2012 தேதியிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. 
            தண்ணீரை முழுவதுமாக தனியார் மயமாக்குவதே இதன் அடிப்படை கொள்ளையாகும்.
             மனிதர்கள் உயிர் வாழ்வதற்க்கும், சுற்றுச்சூழல் உயிர்ப்புடன் இருப்பதற்க்கும் குறைந்தபட்ச தேவையான தண்ணீரை தவிர மற்ற தண்ணீரையெல்லாம் பொருளியல் வளமாக (Economic Good) எடுத்த கொள்ளப்படும் என்று பத்தி 3.3ன் வரைவில் தேசிய நீர் கொள்கை கூறுகிறது. 
            குறைந்தபட்ச தேவையான நீர் வழங்கள் கூட தனியார் கம்பெனிகளின் மூலமாகவே நடத்தப்படவோண்டும் என இக்கொள்கை வரைவு தயாரித்திருப்பது நீர்வளம் முழுவதும் வணிக சரக்காக மாற்றப்பட இருக்கிறது என்பது வரைவின் பத்தி 13.4ன் மூலம் உறுதிசெய்கிறது.
            தேசிய நீர் கொள்கை வரைவின் பிரிவு 7ல் தண்ணீருக்கு விலை நிர்னயம் செய்வது பற்றி சொல்கிறது. காசு இல்லாமல் ஒரு குவளை தண்ணீர் கூட வழங்ககூடாது என்று வலியுறுத்துகிறது. 
             மானிய விலையிலோ விலையின்றியோ / மின்சாரத்தையோ, தண்ணீரையோ, வழங்கும் தற்போதைய நிலை உடனடியாக முற்றிலும் கைவிடப்பட வேண்டும். அப்படி கொடுத்தால் நீர்ரையும், மின்சாரத்தையும் வீணடிப்பதற்கு வழி வகுக்கிறது என இக்கொள்கை வரைவின் பத்தி 7.5ல் அரசைக் கடிந்து கொள்கிறது.
              தண்ணீர் திட்டங்கள் வேளாண்மையும், குடிநீர் வழங்கலையும் முதன்மை இலட்சியமாக கொள்ளக்கூடாது. மாறாக பல்நோக்குக் திட்டங்களாக நீர் மேளாண்மைத் திட்டங்கள் மறுவரையறை ஆக்க வேண்டும். என தேசிய நீர்க்கொள்கை வரைவின் பத்தி 9.5 அரசுக்குக் கட்டளையிடுகிறது.
             இவர்கள் யார் ? இயற்கையை வரையறைக்க ! ஆட்சியாளர்களே ! விரைவில் சுனாமி வரப்போகிறது அந்த சுனாமின் நீரை பொருளியல் வலமாக (Economic Good)  மாற்றுங்களேன் பார்க்கலாம் ?
              மக்களே (இளஞர்களே) விழித்தெழுங்கள் வருங்காள இந்திய அரசியலில் நல்ல பலமான மாற்றத்தை ஏற்றபடுத்துங்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து nwp2012-mowr@nic.in என்ற மின் அஞ்சலுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள்.
                                                                                 -பசுமை நாயகன்
 கரூரில் காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்த பலே ஆர்.டி.ஓ.
புதன்கிழமை, மே ,
கரூர்: கரூர் அருகே உள்ள வெங்கமேட்டில் காணாமல் போன பொதுக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு மக்களிடம்ஒப்படைக்கப்பட்டுள்ள சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
தமிழக சினிமாவில் வரும் ஒரு காமெடி காட்சி போல கரூர் அருகேஉள்ள வெங்கமேட்டில் பொதுக் கிணற்றை காணவில்லை என்று அந்த ஊர் நல பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களான பாலுசாமி, குமணன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனாவிடம் புகார் மனு அளித்தனர்.
புகாரைப் பார்த்த கலெக்டர் ஷோபனா அதிர்ச்சி அடைந்து இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்குமாறு கரூர் ஆர்.டி.ஓ. சாந்திக்கு உத்தரவிட்டார். அதன்படி பொதுக் கிணறு இருந்ததாகக் கூறப்படும் இடத்தைஆர்.டி.ஓ. சாந்தி ஆய்வு செய்து வருவாய்த் துறை ஆவணங்களை சரிபார்த்தார்.
தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி அங்கு பொதுக் கிணறு இருந்ததை உறுதி செய்து கொண்டார். கிணறு இருந்த இடத்தில் மண் மற்றும் குப்பைகள் போட்டு சிலர் அதை மறைத்து அதன் மேல் வீடு கட்டி உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பொதுக் கிணற்றை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம், கிணற்றை திரும்பத் தோண்டி ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து, காணாமல் போன கிணறு கிடைத்தது. மேலும் அந்த கிணற்றை மீண்டும் உருவாக்கி ஆழ்படுத்தி பொது மக்கள் உபயோகத்திற்கு பயன்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை செய்துதர கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் ஆகியோருக்கு சாந்தி உத்தரவிட்டார்.
இது குறித்து வருவாய்த்துறைஅதிகாரிகள் கூறுகையில்,
கரூர் வெங்கமேடு அருகே உள்ள பொதுக் கிணற்றை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டனர். அதனால் அந்த கிணற்றை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து புகார் வந்ததும் கரூர் ஆர்.டி.ஓ. வாக இருந்த சாந்தி விசாரணை நடத்தி அந்த இடத்தை ஆக்கமிரமப்பாளர்களிடம் இருந்து மீட்டு பொது மக்களிடம் ஒப்படைத்தார்.
அந்த இடத்தில் ஊர் மக்கள் சார்பாக கிணறு தோண்டிக் கொள்வதாகக் கூறியிருந்தார்கள். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது என்றனர்.
இந்த நிலையில் கரூர் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய சாந்தி மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு மாற்றப்பட்டுள்ளார்
                                                                                                                          -சந்திரசேகர்